காசிம் சுலைமானின் நினைவு நாளன்று தன் போர்க்கப்பலை ஈரானிலிருந்து தூரத்துக்கு அகற்றுகிறது அமெரிக்கா.
ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில் ஈரானிய அரசின் பாதுகாப்புப்படைகளின் அதியுயர் தளபதி காஸம் சுலைமானி ஈராக்கிய விமான நிலையத்திற்கு இரகசிய விஜயம் செய்தபோது அமெரிக்கா தூர இருந்து குறிபார்க்கும் கருவிகளின் உதவியுடன் சுட்டுக் கொன்றது.
அமெரிக்காவின் இந்தச் செயலால் கோபமடைந்த ஈரான் ஜனாதிபதி டிரம்ப்பையும், அவருக்கு நெருங்கியவர்களையும் கொல்வதாகச் சூழுரை செய்திருக்கிறது. இந்த முதலாம் வருட நினைவு நாட்கள் வருவதையொட்டி ஈரானிய அரசின் உயர்மட்டத்திலிருந்து அமெரிக்காவை நோக்கிப் பல எச்சரிக்கை விடப்பட்டன. இரு பக்கத்தினரும் தமது படைகளைத் தயார் நிலைக்குக் கொண்டுவந்தனர். அதன் ஒரு கட்டமாக அமெரிக்கா தனது போர்க்கப்பல் USS Nimitz ஐ ஈரானுக்கு அருகே கொண்டு சென்று நிறுத்தியிருந்தது.
ஆனால், திடீரென்று இதே நாளில் அந்தப் போர்க்கப்பலை ஈரானுக்கு அருகிலிருக்கும் நீர்ப்பிரதேசத்திலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பும்படி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பெந்தகன் கட்டளையிட்டிருக்கிறது. எவராலும் எதிர்பார்க்க முடியாத இந்த முழு மாற்றத்தைப் பற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் “இதை ஈரானுடனான உறவுகளில் ஒரு மென்மைப்படுத்தலை ஏற்படுத்த எங்களுக்கு இருக்கும் நோக்காகக் காண்பிக்க விரும்புகிறோம்,” என்று கூறியிருக்கிறார்.
மேற்கு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட யுரோனிதத்தைத் தயாரிக்காமலிருப்பது பற்றிய விடயத்தில் மாற்று முடிவெடுத்திருப்பதாக ஈரான் இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. தாம் 20 விகித யுரேனியச் சக்தியை நோக்கி ஆராய்ச்சிகளில் இறங்கியிருப்பதாக ஈரான் அறிவித்தது.
பெந்தகனின் போர்க்கப்பலைத் திருப்பியழைக்கும் முடிவு வரப்போகும் ஜோ பைடனின் அரசாங்கத்தினரின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று எண்ணும் அமெரிக்க அரசியல்வாதிகளின் அதிருப்தியையும் நேரிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்