உலகில் அதிகமாகக் கண்காணிக்கப்படும் நகரம் சென்னை!

CCTV என்றழைக்கப்படும் ஆங்காங்கே வெவ்வேறு காரணங்களுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கமராக்களைக் கொண்ட நகரங்களில் உலகில் முதலிடத்தைத் தட்டிக்கொண்டு போகிறது சென்னை. இரண்டாவது இடத்தை பெறுகிறது ஹைதராபாத்.

சென்னை ஒரு சதுர கி.மீற்றருக்கு 657 கண்காணிப்பு கமராக்களாலும், ஹைதராபாத் 480 கமராக்களாலும் கண்காணிக்கப்படுகிறது. சராசரியாக சென்னையின் ஒவ்வொரு 1,000 குடிமக்களையும் கண்காணிக்க 25.5 கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 

மூன்றாவது இடத்திலிருக்கும் சீனாவின் ஹார்பினில் சதுர கி மீற்றருக்கு 411 கண்காணிப்புக் கமராக்களும், நான்காவது இடத்திலிருக்கும் 399 கமராக்களும் பொருத்தப்படிருக்கின்றன. அதைத் தொடர்ந்து பத்தாவது இடம்வரை சீன நகரங்களே கண்காணிக்கப்படுகின்றன, எட்டாவது இடத்தில் சதுர கி.மீற்றருக்கு 289 கமராக்களால் கண்காணிக்கப்படும் டெல்லி தவிர.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *