சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்பின் வேதனையைச் சுமந்துகொண்டு டிரம்ப்பை உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குட்படுத்தத் தயாராகிறார் ஜேமி ரஸ்கின்.
பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அமெரிக்காவின் செனட் சபை மாஜி ஜனாதிபதி டிரம்ப்பை நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமா என்பதைப் பற்றி விவாதிக்கப் போகிறது. அதைத் தலைமைதாங்கி நடத்தவிருப்பவர் முன்னாள் அரசியல்சட்ட வழக்கறிஞர், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜேமி ரஸ்கின்.
அமெரிக்காவின் செனட் சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலே அது நிஜமாகும். இதற்கிடையே 26.01 அன்று ஜனாதிபதியாக இருந்த டிரம்ப்பை ஜனவரி 06 ம் திகதி பாராளுமன்றக் கட்டட அராஜகங்களுக்காகக் குற்றஞ்சாட்ட முடியாது என்று குறிப்பிட்ட கருத்தை ரிபப்ளிகன் கட்சியினர் வாக்கெடுப்புக்குக் கொண்டுவந்தனர். அது தோல்வியுற்றாலும் கூட அதற்காக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையிலிருந்து வரவிருக்கும் வாக்கெடுப்பு வெற்றியடையுமா என்பதைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
ஜனவரி 06 ம் திகதியன்று பாராளுமன்றக் கட்டடத்துக்குள் வன்முறையில் இறங்கியவர்களைத் தூண்டிவிட்டவர் அன்றைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
அந்தக் குற்றத்தை அவர் செய்தது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது, அதனால் அவரை அதற்காகத் தண்டிக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் செனட் சபை முதல் தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு ஜேமி ரஸ்கினுடையது.
அவைகளில் இரண்டாவதைச் சரியென்று ஏற்கலாகாது என்பதையே ரிபப்ளிகன் கட்சியினர் நிரூபிக்க முயன்று தோல்வியடைந்தனர். ஆனாலும், அக்கட்சியின் ஐந்து செனட்டர்கள் மட்டுமே டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்தனர் என்பது டெமொகிரடிக் கட்சியினருக்கு ஏற்பட்டிருக்கும் சவாலாகும். மேலும் 17 ரிபப்ளிகன் கட்சிச் செனட்டர்களின் ஆதரவு டெமொகிரடிக் கட்சியினருக்கு வேண்டியிருக்கிறது.
தனிப்பட்ட ஒரு இழப்பின் பாரத்தையும் மீறியே குறிப்பிட்ட பொறுப்பை ரஸ்கின் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல வருடங்களாகவே மன உழைச்சலால் வாடிக்கொண்டிருந்த ரஸ்கினின் 25 வயது மகன் பாராளுமன்றக் கட்டட வன்முறை நடந்த நாளுக்கு ஒரு சில நாட்கள் முன்புதான் தற்கொலை செய்துகொண்டார். ஆனாலும், பாராளுமன்ற சபைத் தலைவர் நான்ஸி பெலோசியின் வேண்டுகோளை ஏற்று ரஸ்கின் இந்தப் பொறுப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்