போலந்தின் கடுமையான கருக்கலைப்புச் சட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுக்கிறது.

சுமார் கால் நூற்றாண்டாகக் குறைந்துவரும் பிள்ளைப் பெறுதல்கள், கற்ற இளவயதினர் சுபீட்சம் தேடி வளமான நாடுகளுக்குப் புலம்பெயர்தல், கத்தோலிக்க தேவாலயத்தின் அரசியல் பலம் ஆகியவற்றுடன் கொவிட் 19 ஆல் உயிரிழப்புக்களும் அதிகரித்திருப்பதால் போலந்து நாட்டின் மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான எந்த வழியையும் விடத் தயாராக இல்லை. 

கடந்த ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சட்டமாகிய போலந்தின் கருத்தடைச் சட்டம் கற்பழிப்பு, தாயின் உயிருக்கு ஆபத்து, இரத்தசம்பந்த உறவுகளால் ஏற்பட்ட கருத்தரிப்புத் தவிர்ந்த எந்தக் காரணத்துக்காகவும் கருத்தடை செய்யப் புதிய சட்டம் அனுமதிக்கவில்லை. சட்டமாக்கப்பட்ட நாளிலிருந்தே போலந்தில் அடிக்கடி, ஆங்காங்கேயும், நாடு முழுவதிலும் எதிர்ப்புப் பேரணிகள் நடந்து வருகின்றன. பிரதமரால் “மிருகத்தனம்” என்று விமர்சிக்கப்பட்ட பேரணிகளில் முகக்கவசத்தில் சிகப்பு அடையாளமொன்றை “கருக்கலைப்புக்கு உரிமை வேண்டும்” என்று மக்கள் குரலெழுப்பி வருகிறார்கள்.

குறிப்பிட்ட சட்டம் இவ்வாரத்தின் நடுப்பகுதியில் செயல்பட ஆரம்பித்திருப்பதாக அறிவிக்கப்படவே மக்களின் போராட்டம் புது எழுச்சி பெற்றுத் தொடர்கிறது. பிள்ளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு சலுகைகளை அறிமுகப்படுத்தியிருப்பினும், அவைகளைப் பாவித்தும் தங்கள் பொருளாதார நிலைமை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளப் போதுமானதாக இருக்காதென்று பல போலந்து மக்கள் குறிப்பிடுகிறார்கள். 

https://vetrinadai.com/featured-articles/poland-population-decline/

வருடாவருடம் சுமார் 2,000 கருக்கலைப்புக்கள் சட்டபூர்வமாகப் போலந்தில் நடாத்தப்படுகின்றன. சட்டத்துக்கெதிராகச் செய்யப்படும் கருக்கலைப்புக்கள் கணக்கு வெளியே தெரியாது. மேலும், சுமார் 200,000 பேர் பக்கத்து நாடுகளுக்குச் சென்று கருக்கலைக்குச் செய்துகொள்வதாகக் கணிப்பீடுகள் கூறுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *