கலிபோர்னியா மாநிலத்துப் பாதுகாக்கப்படும் இயற்கைப் பிராந்தியத்தில் சுத்தப்படுத்தப்படாத எரிநெய் பரவுகிறது.

கறுப்பு நிறத்தில் சுத்தப்படுத்தப்படாத எரிநெய் கலிபோர்னியாவை அடுத்துள்ள கடலோரத்தில் பரவி அப்பகுதியின் இயற்கைவளம், உயிரினங்களுக்குக் கேட்டை விளைவிக்கும் அபாயம் தோன்றியிறுக்கிறது. சுமார் 470,000 லிட்டர் எரிநெய் அங்கிருக்கும் எல்லி என்ற எண்ணெய் உறிஞ்சும் தளத்திலிருந்து வெளியேறியிருக்கிறது.

ஒரேன்ஞ் பிராந்தியத்தை அடுத்துள்ள கடற்பிரதேசத்தில் கறுப்பு நிறத்தில் ஒட்டிக்கொள்ளும் களி போன்று பதனிடப்படாத அந்த எரி நெய் பரவியிருக்கிறது. அங்கிருக்கும்  என்ற பாதுகாக்கப்படும் வனப்பகுதியில் ஞாயிறன்று அந்த அழுக்கு பெருமளவு பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 

எண்ணெய் உறிஞ்சும் தளமான எல்லியிலிருந்து வெளியேறும் குழாய் ஒன்று உடைந்ததினாலேயே அந்தச் சூழல் பாதிப்பு நடந்திருக்கிறது. உடைந்த குழாயைச் சீர்செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் நகரசபை உட்பட்ட அதிகாரங்கள் அந்த கறுப்புக் களி மேலும் அதிக இடங்களுக்குப் பரவாமலிருக்க வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *