சீனா பொறுப்புக்கூற வேண்டும் – ஜப்பானில் போராட்டம்
சீனா பொறுப்புக்கூற வேண்டிய பல மனித உரிமை மீறல்கள் இருக்கின்றன, அவற்றிற்கு விரைந்து பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்தி ஜப்பான் ரோக்கியோவில் மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திபெத், ஹொங்கொங்,ஷின்ஜியாங்க், மங்கோலியா போன்ற பல மனித உரிமை விடயங்களுக்கு சீனா பொறுப்புக்கூற வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரோக்கியோவில் அமைந்துள்ள சீனத்ததூதரகத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி தமது குரல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹொங்கொங்கில் சீனாவின் அதிகாரிகளால் நசுக்கப்படும் ஜனனாயகக்குரல்கள் தொடர்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்தியது இந்த போராட்டம்.
குறிப்பாக சர்வதேச நாடுகள் அடுத்த வருட குளிர்கால ஒலிம்பிக் பீஜிங்கில் நடைபெறவுள்ளதால், அதைப்புறக்கணிக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு மீளக்கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டுகளை அண்மித்துக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படியான எதிர்பபுக்கள் கிளம்பத்தொடங்கியுள்ளன.
அதேவேளை சீனாவின் இனப்படுகொலையை விமர்சித்து தீர்மானம் ஒன்றை வெளியிடவும் ஜப்பான் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.