ஒமிக்ரோன் சமூகப் பரவல் லண்டனில் மிகப்பெரிய தாக்கம்|லண்டன் மேயர் அறிவிப்பு
ஒமிக்கரொன் பரவல் தாக்க வேகம் அதிகரிப்பதை தொடர்ந்து லண்டனில் அது “மிகப்பெரிய தாக்கம் ” என லண்டன் மேயர் சதீக் கான் அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் லண்டனில் ஆகக்கடுதலாக கோவிட் நோயாளிகளாகின்னறர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இனங்காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இந்த தொற்றுநோய் பரவல் ஆரம்பித்த காலத்திலிருந்து இது மிகக்கூடியது என்பதையும் குறிப்பிட்டார்.அதேவேளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கும் அதேவேளை மருத்துவப்பணியாளர்களின் வரவு குறைந்து செல்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.
இதனால் லண்டன் அவசரகால நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதனால் தேசிய சேவைகளில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனத்தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறிப்பிட்ட தேசிய சேவைகளில் விசேட ஏற்பாடுகளை ஏற்படுத்தி அதனூடாக இந்த அவசரகால நிலைகள் கையாளப்படும்
இதற்கு முன்னதாக லண்டனில் ,மிகப்பெரிய கிறென் பெல் மாடிக்கட்டட தீவிபத்து ஏற்பப்டபோதும்,லண்டன் பிரிட்ஜ் மற்றும் வெஸ்மினிஸ்ரறை அண்டிய பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றபோதும் இப்படியான அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் கோவிட் பரவலின் போதும் கடந்த ஜனவரி மாதமும் இந்த நிலை தொடர்பாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பொதுமக்களுக்கான பூஸ்ரர் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக லண்டனில் மிகப்பெரிய கட்டடங்கள் பலவற்றில் அதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்களையும் இந்தக்காலங்களில் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
எனினும் இன்றும் அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கும் கோவிட் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்துக்கும் எதிர்ப்பைத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் லண்டனில் இடடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.