ஜேர்மனியில் கடமையிலிருந்த பொலீசாரைச் சுட்டுக்கொன்ற இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேற்கு ஜேர்மனியில் நேற்று நடந்த பொலீஸார் மீதான சுட்டுக் கொலை சம்பந்தப்பட்டுக் கைது செய்யப்பட்ட இருவர் இன்று நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். களவாக வேட்டையாடியவர்களே அப்பொலீசாரைக் கொன்றதாகப் பத்திரிகையாளர் கூட்டமொன்றில் பொலீசார் தெரிவித்தனர். 

சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 38 வயதுக்காரரின் சாரதி அட்டையே பொலீசாருக்குச் சந்தேக நபர்களைத் தேட வாய்ப்பளித்திருக்கிறது. குறிப்பிட்ட 38 வயது நபருடன் மேலுமொரு 32 வயதுக்காரரே அக்கொலைகளைச் செய்திருக்கிறார்கள் என்று பொலீசார் வழக்குப்பதிவின்போது குறிப்பிட்டார்கள்.

போக்குவரத்துப் பணியிலிருந்த பொலீசார் குறிப்பிட்ட நபர்கள் பயணித்த வாகனத்தை நிறுத்தியபோது அதற்குள் மிகப் பெரிய அளவில் களவு வேட்டை இறைச்சி இருந்திருக்கிறது. அதை மறைக்கவே அவ்விரு பொலீசாரையும் அவர்கள் வேட்டைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.

சாள்ஸ் ஜெ.போமன்