சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

சாரணர்களை ஊக்கப்படுத்த நெல்லியடி மத்திய கல்லூரியில் திறக்கப்பட்ட அலுவலகம்

யாழ் மாவட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி, தங்கள் கல்லூரியின் சாரணர்களுக்கான, விசேட அலுவலகம் ஒன்றை உத்தியோகபூர்வமாக பெப்பிரவரி மாதம் 1ம் திகதி 2022ம் ஆண்டு திறந்துவைத்துள்ளது.

மிகவும் வினைத்திறனாக செயற்பட்டுவரும் கல்லூரியின் சாரணர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் பணிகளை இன்னும் மேம்மபடுத்துமுகமாக இந்து புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தை கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

குறித்த நிகழ்வில் சாரணியப் பொறுப்பாசிரியர் திரு S.அமரஜோதி, ஏனைய சாரணியத்தில் தொடர்புடைய ஆசிரியர்கள், மாணவர் படையணி பொறுப்பாசிரியர் 2nd Lt. P.பார்த்தீபன் மற்றும் சாரணிய மாணவர்கள் பங்கேற்றனர்.