அமெரிக்காவில் “வள்ளுவர் வழி” தெரு உருவானது.
உலகப்பொதுமறை எனப் உலகம் போற்றும் திருக்குறளை இவ்வுலகுக்குத் தந்த திருவள்ளுவர் பெயரில், அமெரிக்காவில் தெரு ஒன்றுக்கு வள்ளுவர் வழி (Valluvar way) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வேர்ஜீனிய ( Virginia) மாநிலத்தில் பேர்பேக்ஸ் (Berberks) மாகாணத்திலேயே ஒரு தெருவுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டு தமிழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதன்முறையாக அமையப்பெற்ற இந்த தமிழ் பெயரினால் நமது அடையாளங்கள் உலகளவில் நிலைநிறுத்தப்படுவது பெருமையாகும் என அமெரிக்காவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் தெரிவிக்கிறது.வேர்ஜீனிய மாநிலத்தில் “வள்ளுவர் தெரு” என்ற பெயர் அமைய கூட்டாக தம்முடன் உழைத்த அனைவருக்கும் தங்கள் நன்றிகளையும் பகிர்ந்து கொள்கிறது.
அத்தோடு இந்த தெருவின் பெயர் உருவாக்கத்தில் பங்களித்த வேர்ஜீனிய மாநில உறுப்பினர் டெல் டான் ஹெல்மர் அவர்களும் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் தனது பெருமையை ருவிற்றர் பக்கத்தினூடாக வெளிப்படுத்தியுள்ளார். முதன்முறையாக அமெரிக்காவில் அமையும் தமிழ் பெயர் வள்ளுவர் வழி ( Valluvar way) எனவும் குறிப்பிட்டுள்ளார்.