பலமும் …. பலவீனமும்…

சிந்தும் பார்வையால்
மனதுக்குள்
சிந்து பாட
வைக்கின்றாய்…

கைகளை
பற்றிக் கொண்டு
கடினங்களை வற்ற
செய்கின்றாய்…

ஆசைகள் அத்தனையும்
உனை கண்டு
ஆரவாரம் செய்கிறதே…

நீ
தேநீர் கடையினிலே
தேநீர் அருந்துகையில்
தேரடி அருகில்
நானிருந்தும்
தனை கண்டு
இளைப்பாருகிறேன்…

தேம்பி அழும்
நேரத்தில்
கண்ணம்
வீங்கி வாடும்
சோகத்தில்…

ஏங்கி மனம்
தவிக்கையிலே
மூச்சு வாங்கி தினம்
துடிக்கையிலே…

அரும்பு மீசை
எனை வந்து
குறும்பு செய்து
வருடிவிட…

கரும்பு போல
இனிமையாய்
அந்த இருட்டும்
திகட்டுதடா…

கண் விழித்து
பார்க்கையிலே
கனவென்று
நானுணர்ந்தேன்….

பலமான
அத்தனையும்
பலவீனம் ஆனதடா…

வளமாக மீண்டும்
அந்த
கனவை தந்து
எனை ஏந்திடடா …!

எழுதுவது ; வெண்பா பாக்யா
சென்னை , தமிழ்நாடு….