டிரம்ப்பின் சமூக வலைத்தளமான “Truth Social” பரிசோதனைக்காகப் பாவனைக்கு விடப்பட்டிருக்கிறது.

பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களில் தடைசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களை எட்டுவதற்காக ஒரு தனியான தளத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். “Truth Social“ என்ற அந்தச் செயலி 500 அடையாளப் பாவிப்பாளர்களிடையே சுற்றுக்கு விடப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

“கட்டுப்பாடுகள் இல்லாமல் ஆர்வத்தைத் தூண்டும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயலி,” சமூகவலைத்தளமொன்றைப் பாவனையாளர்களுக்குத் தரவிருப்பதாக Trump Media & Technology Group நிறுவனம் தெரிவித்திருந்தது. பரிசோதனைகள் முடிந்து மார்ச் மாதக் கடைசியில் அந்தச் செயலி பொதுப்பாவனைக்கு விடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பரிசோதனைப் பாவனையாளர்கள் தமது மின்னஞ்சலுக்கு “Truth Social“  ஐப் பாவித்துப் பார்க்கும்படி அழைப்பு வந்ததாகவும் அதைத் தாம் தரவிறக்கிப் பாவித்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த ஒரு நாளுக்கு மேலாக அந்தத் தளத்தில் பாவனையாளர்கள் பதிவுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. டிரம்ப்பின் செயலில் கூகுள், அப்பிள் ஆகிய நிறுவனங்களின் செயலித்தளங்களின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு இயங்குமா என்பது இன்னும் தெரியவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்