பக்கத்து நாடுகளுடன் சர்ச்சைகளுடன் நைல் நதி அணைக்கட்டைத் திறந்துவைத்தார் எத்தியோப்பியப் பிரதமர்.

எத்தியோப்பியாவுக்குள் இருக்கும் நீல நைல் பகுதியை மறித்துக் கட்டப்பட்டு வந்த மிகப்பெரிய அணைக்கட்டின் மின்சாரத் தயாரிப்பை ஞாயிறன்று நாட்டின் பிரதமர் அபிய் அஹமது திறந்துவைத்தார். 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணைத்திட்டம் ஆபிரிக்காவின் மிகப்பெரிய நீர்வளக் கட்டுமானத் திட்டமாகும். அது ஆரம்பத்திலிருந்தே பக்கத்து நாடுகளுடன் நீர் பகிர்தல் சர்ச்சைகளுடன் தொடர்ந்து கட்டப்பட்டு வந்திருக்கிறது.  

“இந்த மாபெரும் அணைக்கட்டுத் திட்டம் எத்தியோப்பியர்களால் கட்டப்பட்டாலும் கூட, இதன் பயனைச் சக ஆபிரிக்க நாட்டு மக்களும் அனுபவிப்பார்கள்,” என்ற அறிக்கை பிரதமர் காரியாலயத்திலிருந்து வெளியாகியிருக்கிறது.

சுமார் 4.2 பில்லியன் டொலர் செலவில் எகிப்த்து, சூடான் நாடுகளுக்குக் கீழ் நோக்கி ஓடுவதை மறித்துக் கட்டப்பட்ட எத்தியோப்பியாவின் அணைக்கட்டு அந்த நாடுகளின் நீர் வளத்தைக் குறைக்கும். எத்தியோப்பிய மின்சாரத் தயாரிப்பை இரு மடங்காக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

பல தடவைகள் ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியம், ஐ. நா உட்பட வெவ்வேறு தலைமைகளில் எத்தியோப்பியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சியையாகப் பிராந்தியத்தில் அதிருப்தியையே ஏற்படுத்தியிருக்கிறது இந்த அணை.

சாள்ஸ் ஜெ. போமன்