தனது நாட்டுக் குழுவுக்கெதிராக அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்ட நியூசிலாந்தின் மிக்கெயெலா மூர்.

நான்கு நாடுகளுக்கிடையேயான SheBelieves Cup உதைபந்தாட்டக் போட்டிகள் அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கின்றன.பிரான்ஸ், நியூசிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் அக்கோப்பைக்காக மோதுகின்றன. இரண்டாவது மோதலில் நியூசிலாந்தை எதிர்கொண்ட அமெரிக்கா 5 – 0 என்ற வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

அமெரிக்கா வெற்றிபெற்றது என்பதையும் விட அதிகமாகப் பேசப்படுவது லிவர்பூல் குழுவுக்காக விளையாடும் நியூசிலாந்தைச் சேர்ந்த மிக்கெயெலா மூர் முதல் பாதி விளையாட்டின் முன்னரே தனது நாட்டின் வலைக்குள் மூன்று தடவைகள் தவறாகப் பந்தைப் போட்டு அமெரிக்காவுக்கு 3 – 0 என்ற வித்தியாசத்தில் வெற்றியைக் கொடுத்துவிட்டார் என்பதாகும். 

40 நிமிட விளையாட்டுக்குப் பின்னர் கண்ணீர் வடியும் கண்களுடன் மிக்கெயெலா மூருக்குப் பதிலாக வேறொருவர் மாற்றப்பட்டார். மோதலின் இறுதியில் அமெரிக்க அணியினர் மேலும் இரண்டு தடவை நியூசிலாந்துக்கு எதிராக வலைக்குள் பந்தை அடித்தார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்