IDFC FIRST Bank என்ற வங்கியின் தலைமை நிர்வாகி தன்னிடமிருந்த 6 லட்சம் பங்குகளைத் தனது ஊழியர்களுக்குப் பகிர்ந்தளித்தார்.
2015 இல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட IDFC FIRST Bank இன் தலைமை நிர்வாகி தன்னிடமிருந்த வங்கியின் பங்குகளில் சுமார் 3.95 கோடி ரூபாய் பெறுமதியான பங்குகளைத் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கும், வேறு சிலருக்கும் நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். வீட்டு வேலைக்காரர், சாரதி, உடற்பயிற்சியாளர் ஆகியோருக்கு வீடுகளை வாங்கவும் மற்றைய தேவைகளுக்காகவும் அவர் அப்பங்குகளைக் கொடுத்திருக்கிறார்.
போக்குவரத்து, தொலைத்தொடர்புகளில் முதலீடு செய்பவர்களுக்கு ஆலோசனையும், முதலீட்டு உதவிகளும் செய்யும் integrated infrastructure finance company இன் வங்கியாகும். தனியார் வங்கியான இது 2022 முதல் காலாண்டில் 117 % இலாபத்தைக் காட்டியதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
திங்களன்று பங்குச் சந்தை விலைப்படி 3.95 கோடி ரூபாய் பெறுமதியுள்ள 6 லட்சம் பங்குகளில் 3 லட்சம் பங்குகளைத் தனது உடற்பயிற்சி உதவியாளருக்கும், 2 லட்சம் பங்குகளை வீட்டு வேலைகாரர், சாரதிக்கும் 1 லட்சம் பங்குகளைத் தனது இன்னொரு வீட்டு வேலைக்காரருக்கும், காரியாலய உதவியாளருக்கும் கொடுத்திருக்கிறார் அந்த வங்கியின் தலைமை நிர்வாகி வி.வைத்தியநாதன். அவர் தன்னிடமிருக்கும் பங்குகளை தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சமூக சேவைகளுக்கும் நன்கொடையாகக் கொடுப்பது இது முதல் தடவையல்ல.
சாள்ஸ் ஜெ. போமன்