என் அன்பு தோழி

என் இருளான உலகில்
ஒளியேற்ற வந்த என் தோழியே
என்னை நொடிக்கு நொடி சிரிக்க வைத்தாயே
என்னை சந்தோசப் படுத்துவதற்காக தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருக்க வைத்தாயோ….?

நான் கவலையாக இருக்கும் வேளையில்
ஒரு துளி நேரம் ஒதுக்கி நமக்கு பிடித்தவர்கள் நம்மிடம் பேச மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்குள் அதிகம் இருக்கிறது என் அன்பு தோழி

ஆனால் இன்றோ நீ வந்த பின்பு இது எல்லாம் ஒரு கனவாக மாறிவிட்டது

என் தோழியே உன்னை நான் ஆயிரம் முறை கஷ்டப்படுத்திநாளும் எனக்கென்று ஒரு கஷ்டம் வரும்பொழுது நீ துடிக்கும் துடிப்பில் நம் நட்பை கண்டேன்

நீ என் தோழியாக கிடைத்தது என் வரம் என்று நினைத்தேன்
ஆனால் இன்றோ நான் உனக்காக செய்த புண்ணியம் என்று தெரிந்துகொண்டேன்
என் தோழி

நான் உன்னிடம் சிறு சிறு சண்டைகள் போட்டாலும் நான் உன்னை விட்டு விலக வேண்டுமென நினைத்தாலும் நீ என்னை விலக விடவில்லை நான் உன்னை கஷ்டப்படுத்தும் போது நீ என்னை கஷ்டப் படுத்த வில்லை

நீ என் தோழியாக கிடைத்தால் நான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உன் அருகிலேயே இருப்பேன் என் அன்பு தோழி

எழுதுவது:
ஜீவஸ்ரீ, l BA Tamil அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,கரூர்