வருவாயா கவித்தமிழே
இசையினில் கலந்திட
இயக்கங்களில் முழங்கிட
கவிதையாக வருவாயா
கடலலையாக தழுவுவாயா
மழையாக வருவாயா
மணமாக வீசுவாயா
பனியாக வருவாயா
பாலாக சுவைதருவாயா
நீராக வருவாயா
நெருப்பாக எரிவாயா
திருந்திடவே செய்வாயா
தீங்கினையே எரிப்பாயா
காலம் வரும்வரை
காத்திருப்பேன் உனக்காக
கன்னித் தமிழ்தனை
கண்போலக் காத்திடவே
தமிழே வந்திடு
தரணிதனைக் காத்திட
தமிழே வராய்!
தமிழ்மணம் கமழ…..
இசையினில் கலந்து
இயங்களில் முழங்கிட
ஆபத்தாக வேண்டாம்
நெருப்பாக வேண்டாம்
நீராக வேண்டாம்
ஆபத்தாக வேண்டும்
ஆயுதமாக வேண்டாம்
பரிவோடு காத்திடு
பாசத்தோடு அணைத்திடு…
எழுதுவது : நாகவதி ஆச்சிஅம்மையார்
ஈப்போ.