எங்கள் உலகம் எங்கள் ஆசிரியர்கள்
ஒரு இல்லத்தில் இருக்கும் தெய்வம் தாய் தந்தை என்றால் எங்கள் கல்லூரியில் இருக்கும் தெய்வம் எங்கள் ஆசிரியரே அவர்களே எங்கள் உலகத்தின் ஒளி வடிவம்
நாம் பசியின்றி வாழ்வதற்காக உழைப்பவர்கள் நம் தாய் தந்தை என்றால் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்க பாடுபடுபவர்கள் நம் ஆசிரியர்களே
இல்லத்தில் இல்லத்தரசியாவும் நம் மனதில் மகிழ்ச்சி அரசியாகவும் இருப்பவர்கள் நம் ஆசிரியர்களே
ஆசிரியராக பிறக்க படிப்பு தேவை என்று இவ்வுலகம் சொன்னாலும் ஆசிரியராக பிறக்க வரம் பெற்று இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன்
நம் அருகில் இருக்கும் போது ஆசிரியராகவும் தன் வீட்டில் தன் குழந்தைகளுக்கு தாய் தந்தையாகும் திகழ்கின்றனர் நம் ஆசிரியர்கள்
எங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க வந்த எங்கள் ஆசிரியரே உங்கள் உறவை நாங்கள் மட்டுமே நேசிப்போம்
எங்கள் உருவமாக நீங்கள் உங்கள் நிழலாக நாங்கள் உங்கள் வளர்ப்பால் நாங்கள் பெறுவோம் பட்டம்
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் ஆசிரியர் என்ற ஒரு உறவே உன்னதமான உறவு
நாம் செய்யும் தவறை எல்லாம் மனிப்பவர்கள் நம் பெற்றோர் ஒவ்வொரு முறையும் அந்த தப்பை மன்னிப்பது மட்டுமில்லாமல் அறிவுரைகள் கூறி நம் தவறை திருத்துபவர்களும் நம் ஆசிரியர்களே
இத்தகையான எங்கள் ஆசிரியர்களின் உலகை எங்களுக்காகவும் எங்கள் படிப்பிற்காக செலவிடும் அவர்களுக்கு இக்கவிதையை தான் சமர்ப்பிக்கிறேன்
எழுதுவது:
வ.ஜீவஸ்ரீ
l BA tamil
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கரூர்,