ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு பெண்ணே..
ரௌத்திரம் பழகு!

அடங்கி கிடந்தால் ஆமை யென்பார்!
அயர்ந்து கிடந்தால் ஊமை என்பார்!
குனிந்து நடந்தால் கோழை யென்பார்.!
கொஞ்சம் நிமிரடி..
ரௌத்திரம் பழகடி.. அதுதான் உனக்கு நல்லது!

வாசலைத் தாண்டினால் ஒடுகாளி யென்பார்.. வாய்கொஞ்சம் திறந்தால்.. மூடுயென்பார்! கைவீசி நடந்தால்.. அகங்காரி யென்பார்..! கண்கொண்டு பாரடியோ செல்லப் பெண்ணே!
கண்களை துடைத்தெறி ரௌத்திரம் பழகடி.. ஞானப்பெண்ணே.!

ஆசையுடன் படித்தாலோ
அடங்கடி யென்பார்! அறிவொளி ஏற்றிடாமல் அடுப்படி போ என்பார்! வேலைக்கு போனாலோ வீம்புக்காரி யென்பார்!
வேறென்ன சொல்லுவேன் ஞானப் பெண்ணே!
வீரநடை போடடியோ..
ரௌத்திரம் பழகடியோ ஞானப் பெண்ணே!

எழுதுவது : வே.கல்யாணகுமார். பெங்களூரூ.