மரம் பேசுகிறது

அடை மழையில்
அடிப்பட்டு பாறை மீது
மோதி பள்ளத்தில்
விழுந்தாள் என் தாயவள்.
பாறை மீது மோதியதில்
அவளது கரு
உடைய என்னை
பிரசவித்து விட்டு இறந்து போனால்.

அன்றிலிருந்து என்
வாழ்க்கை பயணம்
ஆரம்பமாகியது…..
அடிக்கின்ற காற்றிற்க்கும்
அடிக்கின்ற வெயிலிற்க்கும் மத்தியில் நான்
வளர்ந்து வந்தேன்.பருவ வயதை அடைந்த போது
என் உடம்போ கரு நிறமாகவும் ….என் கூந்தலோ கொள்ளை
கொள்ளும் பச்சை
நிறமாகவும் காட்ச்சி அளித்தேன்…..

நான் ஒரு அழாகான
தேவதை …..
ஆகையால் என்னை காண்பவர் எல்லாம்
என்னிடம் வந்து
தலைசாய்து அமர்ந்து விட்டு செல்வார்கள்.
நானோ அவர்களுக்கு
அவர்கள் வெளியேற்றும்
அசுத்த காற்றை நான்
எடுத்துக் கொண்டு
என்னிடமிருந்து சுத்தமான ஒட்சிசனை
அவர்களுக்கு வழங்கி
வழியனுப்பி வைப்பேன்.

அன்று ஒரு நாள்
அவ்வழியே வந்த
மனிதனொருவன்
என் உடம்பின் ஒரு பகுதியை வெட்டி வீழ்த்தினான்….
நான் கதரி அழுதேன்
அது அவன் காதுகளில்
விழ வில்லை ….
இன்று என்னை வெரும்
கால்களோடு விட்டு விட்டு ….
வெயில் கொள்ளும் வேளையில் இளைப்பார இடம்மின்றி
அவன் கால்வலிக்க நடக்கின்றான்.
அன்று என் கால் வலித்தது
இன்று உன் கால் வலிக்கிறது.

எழுதுவது : திகன கலை