அமராவதி ஆற்றங்கரையில் அருள்தரும் கல்யாண பசுபதீஸ்வரர்
முன்னுரை:
உலகில் பல கோவில்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சன்னதிகள் :
இக்கோவிலில் சிவபெருமானை பசுபதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.மூலவர் பசுபதீ்வரர்,சுயம்பு லிங்கமாக உள்ளார்.
சிறப்பு :
இத்தலத்தில் மாசி மாதத்தின் ஐந்து நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது.மூலவரின் இடது பக்கத்தில் அலங்காரவல்லி,சௌந்தரவல்லி சன்னதிகள் உள்ளன.
அமைவிடம் :
கரூர் மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரப் பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் ,இக்கோவில் அமைந்துள்ளது
கோவில் அமைப்பு :
இக்கோவில் கொடிமரம்,கருங்கல்லால் ஆனது.இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர்.பசுபதிநாதர் , பசுபதீஸ்வரர்,ஆநிலையப்பர்,பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார்.தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இதுவும் ஒன்று ஆகும்.கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும். இக்கோவில் கட்டிடக்கலைச் சிறப்பு மிக்கது. இக்கோவிலில் நால்வர் மண்டபம் உள்ளது.
கட்டிடக்கலை :
இக்கோவில் திராவிட கட்டிடக்கலை அம்சத்தை கொண்டுள்ளது.திராவிடக் கலை என்பது தென்னிந்திய கோவில் கலை பணியாகும்.இக்கோவிலின் அமைப்பு மிகச் சிறப்பானது ஆகும்.கோவிலின் மையப் பகுதியில் அமைந்திருப்பது கருவறையாகும். இப்பகுதி தான் முதன் முதலில் கட்டப் பட்ட பகுதி ஆகும்.கருவறையின் மேல் விமானம் அமைக்கப்பட்டு உள்ளது.அவ்விமானம் வட்ட வடிவில் அமைந்து இருக்கும்.அதற்கு மேல் கலசம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அமைப்பே ஆரம்பக் காலத்தில் கோவில் கட்டும் முறையாக இருந்தது.கருவறை அடுத்து இருப்பது அர்த்தமண்டபம் ஆகும்.
தல வரலாறு :
படைப்புத் தொழில் பற்றி பிரம்ம தேவனிற்கு உண்டான கர்வத்தை அடக்குவதற்காக சிவன் நடத்திய திருவிளையாடலால் உண்டான தலம் இது.சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காம தேவனிடம் நாரதர் சென்று பூலோகத்தில் உள்ள வஞ்சிவனித்தில் தவம் செய்தால் அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார்.வஞ்சி வனமாகிய கரூர் சென்று அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம் செய்து வழிபட மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேவனுக்கும் விரும்புவற்றைப் படைக்ககூடிய ஆற்றலை அளிக்கிறார்.காம தேவனுக்கு கிடைத்த படைபாற்றலால் அஞ்சிய பிரம்மா,தனது தவறை உணர்ந்து சிவனிடம் போய் தஞ்சம் அடைந்தார்.சிவனும் அவரை மன்னித்து படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து காமதேவனை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.
காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில்,சிவன் பசுபதீ்வரர்
என்றும் ஆநிலையப்பர்
என்றும் அழைக்கப்படுகிறார்.
பாடல் பெற்ற தலம் :
எறிபத்த நாயனார் தோன்றியதும் புகழ்ச்சோழ நாயனார் ஆண்டதும் இத்தலமாகும்.கொங்கு நாட்டில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று.திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவர் பிறந்தது இவ்வூரில் தான். இது திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப் பெற்றுள்ளது.
திருவிழாக்கள் :
இங்கு பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம் வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது.
குடமுழுக்கு :
குடமுழுக்கு விழா நிகழ்வினையொட்டி இக்கோவில் 4 நவம்பர் 2020 அன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. 4 திசம்பர் 2020 வெள்ளிக்கிழமை இக்கோவிலின் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
முடிவுரை :
இக்கோவிலின் சிறப்பு, தல வரலாறு,கட்டிடக்கலை , கோவில் அமைப்பு, பாடல் பெற்ற தலம்,திருவிழாக்கள் , குடமுழுக்கு பற்றி இக்கட்டுரையில் பார்த்தோம். இன்னும் பல சிறப்புக்களை அவ்வப்போது எதிர்பாருங்கள்.
எழுதுவது : இ.திவ்ய தர்ஷினி
இளங்கலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,பண்டுதகாரன் புதூர் , மண்மங்கலம் , கரூர் -6