நூறு வருடங்கள் காணாத வரட்சியால் கலிபோர்னியாவில் நீர்ப்பாவனைக் கட்டுப்பாடுகள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தென்பாகத்திலிருக்கும் நீர் பகிர்ந்தளிக்கும் நிர்வாகம் நிறுவப்பட்ட காலத்திலிருந்து இதுவரை காணாத வரட்சியைச் சந்தித்திருக்கிறது. சுமார் நூறாண்டுகளாக இயங்கும் அந்த நிர்வாகம் தனது அதிகாரப் பரப்பிலிருக்கும் 20 மில்லியன் பேர் பாவிக்கும் நீர் அளவில் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.
கிடைக்கும் நீரில் நீச்சல் குளம், தோட்டம் போன்றவைகளுக்கான பாவிப்புக்களை வாரத்துக்கு ஒரு முறை மட்டும் எடுத்துக்கொள்ளும்படி நீர்வள நிர்வாகம் குடிமக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் மூலமே அவர்களுடைய சமையல், சுகாதாரம் போன்ற பாவிப்புக்களுக்குத் தேவையான நீர் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
“இதுபோன்ற கட்டுப்பாடுகளை இதுவரை நாம் எப்போதுமே போட்டதில்லை. கடந்த வருடம் இதே காலகட்டத்திலும் கடும் வரட்சியும், நீர்த்தட்டுப்பாடும் நிலவியது. இவ்வருடமோ மேலும் அதிக பிராந்தியத்தில் நிலைமை படுமோசம். முதல் தடவையாக, 35 % ஆல் நீர்ப்பாவிப்பைக் குறைக்காவிட்டால் இவ்வருடம் முடியும்வரை பாவனைக்கான நீர் இருக்காது என்று நாம் எச்சரித்திருக்கிறோம்,” என்கிறார் நீர்வள நிர்வாக உயரதிகாரி.
1,200 வருடங்களாக இயங்கிவந்தபடி அது கடந்த கால் நூற்றாண்டாக இயங்கவில்லை என்பதே நீண்டகாலமாக கலிபோர்னியாவில் மீண்டும் மீண்டும் தொடரும் வரட்சிக்குக் காரணமாகும். சியாரா நிவாடா மலைப்பகுதியிலில் இவ்வருடம் இருந்த பனி வழக்கமாக இதே காலப்பகுதியில் இருக்கும் பனியை விட 32 % ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்