வானவில்
கனவுகளைக் கலைத்து
என் கண்களை
நிறைத்தாய்…
கணநேரம் நின்றாய்
என் கவலைகள்
யாவையும்
வென்றாய்…
வானம் முழுவதும் பல வண்ணங்கள்
கொண்டாய்…
இன்னும்,
திரைகள் விலக்கினேன்
என் கண்கள் ஒளிர்ந்தன…
மேகங்கள் தழுவி
ஓய்ந்ததால்
நீயும் வருவாய்
என்றிருந்தேன்…
இன்றும்…
பெ.மாலையம்மாள்@ராசாத்தி
ஸ்ரீ வில்லிபுத்தூர்.