வெற்றியின் சிகரம் தொடு
வெற்றி லட்சியத்தை அடைய உன் பாதையை உருவாக்கி தொடர்ந்து முன்னேறி கொண்டே இரு!!
வாழ்க்கை நீ செல்லும் பாதையில் ஆயிரம் தடைகள் வந்தாலும் தடைகளைத் தகர்த்ததெறிந்து சிகரத்தை தொடு!!
நீ சிந்திக்கும் எண்ணம் சிறியதாக இருந்தாலும் உன் எண்ணம் சிகரத்தை அடைவதாக இருக்க வேண்டும்!!
சிந்திக்க சிந்திக்க சிந்தனையை வடிவில் செயலை செய்தாலே சிகரத்தை தொட்டுவிடலாம்!!
வாழ்க்கையில் வெற்றியும்;தோல்வியும் மாறி வரும் எது வந்தாலும் மனத் துணிவுடன் கடந்து
சிகரத்தைத் தொடு!!
சிகரத்தை தொட சிந்தனையும் முயற்சியுடன்; பயிற்சியும் இருந்தால் வெற்றி சிகரத்தை வென்று விடலாம்!!
எமுதுவது :மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்.