உலகின் அதிகுறைந்த நேர விமானச்சேவையில், பறக்கும் நேரம் 53 வினாடிகள் மட்டுமே.

ஐக்கிய ராச்சியத்திலேயே மிகப்பெரிய உள்ளூர் விமானச் சேவையைக் கொடுக்கும் நிறுவனம் லொகன்ஏயார் ஆகும். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தைத் தனது மையமாகக் கொண்டு இயங்கும் அந்த விமான நிறுவனத்தின் சேவைகளிலொன்றான LM 711 இல் தான் உலகத்தின் மிகக் குறைவான நேரத்தில் இரண்டு இடங்களுக்கிடையே பயணிகள் பறக்கிறார்கள். இது கின்னஸ் உலகச் சாதனைகளில் ஒன்றாகப் பதியப்பட்டிருக்கிரது. 

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஓர்க்னி தீவுகளில் ஒன்றான வெஸ்ட்ரேய் தீவிலிருந்து பக்கத்திலிருக்கும் பாபா வெஸ்ட்ரேய் தீவுக்கு அந்த விமானச் சேவை நடைபெறுகிறது. இரண்டு தீவுகளுக்குமிடையே இருக்கும் தூரம் 2.7 கி.மீ மட்டுமே. விமானம் பறக்கும்போது சாதகமான சூழலில் அது எடுக்கும் நேரம் 53 வினாடிகள் மட்டுமே. இச்சேவை அவ்விரு தீவுகளுக்குமிடையே தினசரி 2,3 தடவைகள் நடைபெறுகிறது.

கோடைகாலத்தில் பலரை ஈர்க்கும் தீவான வெஸ்ட்ரேயில் வாழ்பவர்கள் எட்டுப் பேர்கள் மட்டுமே. பாபா வெஸ்ட்ரேய் தீவில் நூறு பேருக்கும் குறைவானவர்களே வாழ்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்குப் பிரபலமான அதன் அளவு 918 ஹெக்டேர்கள் ஆகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *