சொந்த மண்ணிழந்து புலம்பெயர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியது.
தமது சொந்த வாழ்விடங்களை இழந்து வேறிடங்களுக்கு ஓடியிருப்பவர்களி எண்ணிக்கை முதல் தடவையாக 100 மில்லியன் பேரைத் தாண்டியிருப்பதாக ஐ.நா-வின் புலபெயர்ந்தவர்களுக்கான அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அவர்கள் வன்முறைகள், போர்கள், மனித உரிமை பறிப்பு ஆகியவைகளால் பாதிக்கப்பட்டவர்களாகும்.
கடந்த வருட இறுதியிலேயே 90 மில்லியனைத் தாண்டியிருந்த அப்புலம்பெயர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டுவதற்குக் காரணம் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போராகும். எத்தியோப்பியா, புர்க்கினோ பாசோ, மியான்மார், நைஜீரியா, கொங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் 2021 இல் பெருமளவில் பலர் தமது மண்ணையிழக்கக் காரணமாயிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்