சூழல் மாசுபாடுகளால் உலகில் அதிகமான குழந்தைகள் இறக்கும் நாடு இந்தியா.
2019 ம் ஆண்டில் இந்தியாவில் சூழல் மாசுபாடுகளால் இறந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை 23.5 இலட்சம் ஆகும். அவர்களில் 16,7 இலட்சம் பிள்ளைகளின் இறப்புக்கான காரணம் சூழலிலிருக்கும் நச்சுக் காற்றுகளைச் சுவாசித்தமையே என்கிறது வெளியிடப்பட்டிருக்கும் [The Lancet Planetary Health journal]ஆராய்ச்சி அறிக்கையொன்று. உலக நாடுகளிலெல்லாம் சூழல் மாசுபாடுகளின் விளைவுகளை ஆராந்த அந்த அறிக்கையின்படி இந்தியாவிலேயே அப்படியான இறப்புக்கள் மிக அதிகமாக நிகழ்கின்றன என்கிறது.
மாசுபட்ட சூழலின் விளைவுகளே 2019 இல் உலகெங்கும் ஏற்பட்ட இறப்புக்களில் ஆறிலொரு பங்கு இறப்புக்களுக்கான காரணமாகும். அவற்றின் எண்ணிக்கை சுமார் 9 மில்லியன் பேராகும்.
சூழல் மாசுபாட்டின் சுகாதார பாதிப்புகள் மிகப்பெரியதாகவே இருக்கின்றன, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இந்த சுமையின் பெருமளவைத் தாங்குகின்றன. அதன் விளைவுகளாக உடல்நலம், சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகள் இருந்தபோதிலும், சர்வதேச வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் மாசு தடுப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை,” என்று ஆய்வு முன்னணி எழுத்தாளர் ரிச்சர்ட் புல்லர் கூறினார்
சுற்றுப்புற சூழல் மாசுபாடு காரணமாக ஏற்படும் அதிகப்படியான இறப்புகள் 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 4·6 திரில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பொருளாதார இழப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன. இது உலகப் பொருளாதார உற்பத்தியில் 6.2 சதவீதமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்