சிதம்பரா கணிதப்போட்டி பரீட்சை முடிவுகள் வெளியாகிறது- ஜூன் 1 ல்
தாயகத்திலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஒரே நாளில் நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வரும் ஜூன்மாதம் முதலாம் திகதி லண்டனில் வெளியாகிறது.
அதேவேளை தாயக பரீட்சை முடிவுகள் ஜூன் மாதம் பத்தாம் திகதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றிய இந்த பரீட்சையின் லண்டன் மாணவர்களின் முடிவுகளை, சிதம்பரா கணிதப்போட்டியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நாளையிலிருந்து ஜூன் 1ம் திகதியிலிருந்து காணமுடியும்.
அதேவேளை தாயக மாணவர்களின் பரீட்சை முடிவுகள் தினக்குரல் பத்திரிகையில் ஜூன் 10ம் திகதியன்று வெளியாகும் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வெற்றிபெற்ற ஐக்கிய இராச்சிய மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் , வரும் ஜூன் மாதம் 25ம் திகதி லண்டனில் , குரொய்டன் Fairfield பிரமாண்ட அரங்க நிகழ்வில் வழங்கி கௌரவிக்கப்படும் சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.