கோடைகாலம் நீண்டுகொண்டிருக்க மற்றைய காலங்களெல்லாம் குறுகிக்கொண்டிருக்கின்றன.

சரித்திரத்திலேயே அதிகமான வெப்பநிலையை பெரும்பாலான ஐரோப்பாவின் தெற்கு, மேற்குப் பகுதிகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தையும் வெப்பம் ஆட்டிப்படைக்கிறது. சூறாவளிகளும், புயல்களும் அப்பகுதிகளை நெருங்குவதாக வானிலை அவதானிப்பு நிலையங்கள் எச்சரித்திருக்கின்றன.

வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் காணப்படும் 40 பாகை செல்சியஸ் பல ஸ்பெய்ன் நகரங்களில் கடந்த நாட்களில் காணப்பட்டன. அது இந்த மாதத்தின் வழக்கமான வெப்பநிலையை விட 15 பாகை அதிகமானதாகும். பிரான்சின் பகுதிகளில் கடந்த வாரத்தில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் ஆக இருந்தது. இவ்விரண்டு நாடுகளிலும் மே மாதத்துக்கான வெப்பநிலைச் சாதனை இவ்வருடத்துடையதாக இருக்கும்.

வரவிருக்கும் வாரங்களில் அதே வெப்பநிலை கிரீஸ், அல்பானியா, இத்தாலி ஆகிய நாடுகளிலும் பரவவிருக்கிறது. இதே சமயத்தில் மேற்கு ஐரோப்பாவில் வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாக இருக்கிறது. இவ்விரு பிராந்தியங்களுக்கும் இடையேயான வெப்பநிலை வித்தியாசம் ஜேர்மனியின் பாகங்களில் புயல், சூறாவளிகளை உண்டாக்கி அழிவுகளைக் கொடுத்திருக்கிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் உலகின் பகுதிகள் காட்டமான பருவ நிலைகளை அனுபவித்து வருகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். பாகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஒரு பக்கம் கடுமையான வெம்மையையும் வேறு பகுதிகள் கடும் மழை வெள்ளம் போன்றவற்றையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் தென் பகுதியிலிருந்து, கிழக்கை நோக்கி வெப்ப அலை கடந்த நாட்களில் பரவியிருக்கிறது. 35 பாகை செல்சியஸ் வெப்பத்தை அப்பாகங்களில் மக்கள் நேரிட்டிருக்கிறார்கள். 

வரவிருக்கும் 80 வருடங்களில் உலகமெங்கும் பருவகாலங்களில் மிகப் பெரும் வித்தியாசங்களைக் காணக்கூடியதாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. 2100 ம் ஆண்டளவில் உலகின் வட பாகங்களில் 6 மாதங்கள் கோடை காலமாகி மற்றைய பருவகாலங்களின் அளவு பெருமளவில் குறைந்துவிடும் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 

1952 – 2011 வரையிலான காலநிலைகளை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் அந்த 60 வருடங்களில் 78 நாட்களிலிருந்து 95 நாட்களாக அதிகரித்திருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *