கம்பரின் கவிநயம்| கட்டுரைப் பக்கம்
முன்னுரை:
கம்பர் என்னும் புலவர் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் கிடைத்த பொக்கிஷம். ராமாயணம் என்னும் இதிகாச புராணத்தை நம் போன்ற தமிழர்களும் படிக்க மற்றும் தெரிந்துகொள்ள காரணமானவர் கம்பர் அவர் பிறந்த மண்ணில் நாமும் பிறந்ததற்கு பெருமிதம் கொள்வோம்.
கம்பரின் காலம்: கி.பி.1180 – கி.பி.1250
கம்பர் குறிப்பு:
கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார். இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. கம்பரின் தந்தை ஆதித்தன். கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர். கம்பரை புரந்தவர் திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல்.கம்பரது காலம் கிபி பனிரெண்டாம் நூற்றாண்டு.இவர் செய் நன்றி மறவா இயல்பினர்.தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் என பாடி சிறப்பித்துள்ளார். கம்பராமாயணம்,சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை , மும்மணிக்கோவை ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும். சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி புலவர் , ஆகியோர் இவர் சமகாலத்து புலவர்கள்.
கவித்திறன்:
ராமாயணம் என்னும் நூலை வால்மீகி என்பவர் வடமொழியில் எழுதினார். கம்பர் ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்தார். கம்பர் இதற்கு ராமாவதாரம் என்று பெயரிட்டார். இதனை கம்பராமாயணம் என்று கூறுவர். கம்பர் ராம அவதாரத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றினார். கம்பர் இயற்றிய நூல்களிலே இது மிகவும் சிறப்பானது.
கம்பரின் சிறப்பு பெயர்கள்:
வாய்மொழி கபிலர், புகழ் கபிலர், செந்நாக் கபிலர், புலனழுக்கற்ற அந்தணாளன் என்றும் புலவர் பலரால் புகழ் பெற்று மதிக்கப்பட்டவர். “கம்ப நாடகம் கவிதையைப் போல் கற்போருக்கு இதயம் கலையாதே”
“கல்வியிற் பெரியோன் கம்பன்” “கவிச்சக்கரவர்த்தி”போன்ற பட்டங்கள் சூட்டியுள்ளனர்.
கம்பரின் கவித்திறனால் “கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்” என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசமாக கருதப்படுகிறது.
கம்பர் பெயர்க்காரணம்:
இன்று கம்பர் குலம் என்று அழைக்கப்படும் உவச்சர்கள் குலத்தில் பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர்.
காளி கோவிலில் பூஜை செய்கின்ற மரபினர் உவச்சர்கள் என்று சுட்டப்படுகிறார்கள்.
கம்பரின் வரலாறு:
கம்பருடைய மகன் அம்பிகாபதி என்று வரலாறு கூறுகிறது. அம்பிகாபதி கவிஞனாக இருந்து சோழ மன்னனின் மகளான. அமராவதியை காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக சோழ மன்னன் அம்பிகாபதிையக் கொன்றுவிட்டார் என்றும், அதன் காரணமாகவே ராமாயணத்தில் புத்திர சோகத்தை கொண்ட தசரதன் பாடும் பாடல்களில் புத்திர சோகம் அதிகம் வெளிப்படுவதாகவும் கூறுகின்றனர். சோழ மன்னனுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக கம்பர் சோழ நாட்டிலிருந்து ஆந்திரா நாட்டிற்கு சென்று தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது வரலாறு. சோழ மன்னன் கம்ப நாடு என்ற பகுதியை கம்பருக்கு தந்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டமும் சோழ மன்னனே தந்தது என்று கூறுகின்றனர்.
பாரதியார் கூறிய சிறப்பு:
கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என தன்னுடைய சுயசரிதையில் மகாகவி பாரதியார் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னுடைய பாடலில் “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என பாடியுள்ளார்.
“வெண்பாவிற் புகழேந்தி
பரணிக்கோர்
சயங்கொண்டான்
விருத்தமென்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன்
கோவையுலா
அந்தாதிக் கொட்டக்கூத்தன்
கண் பாய கலம்பகத்திற்
கிரட்டையர்கள்
வசைபாடக் காளமேகம்
பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
லாலொருவர் பகரொ ணாதே
பல பட்டடைச் சொக்கநாதப் புலவர்”.
கம்பரின் நினைவிடம்:
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி என்ற கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கம்பர் நினைவிடம் உள்ளது. கம்பர் இயற்றிய கம்பராமாயணத்தில் காதல் தமிழ், வீரத்தமிழ், ஆன்மீக தமிழ் என அனைத்தும் இருக்கும். அதனால்தான் இன்றும் இந்த பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதியில் உள்ள இடத்தில் இருந்து மண் எடுத்து குழந்தையின் நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது. அப்படி செய்வதால் குழந்தை நல்ல தமிழ் ஆற்றலுடனும் மிகுந்த தமிழ் அறிவுடனும் வளரும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தேரில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
முடிவுரை:
கம்பர் என்னும் புலவர் நம் தாய் மண்ணில் பிறந்து தமிழ் என்னும் அமுதைத் தந்து அதை நாம் பருகுவதற்கு நமக்கு வாய்ப்பும் அளித்து அதற்கு நிறைய இலக்கிய இலக்கணங்களையும் விட்டுச் சென்றுள்ளார். அத்தமிழை நாமும் பயின்று தமிழ் மொழியை நம் தமிழ்நாட்டில் நிலைநாட்டி பிற நாடுகளிலும் பேசி தமிழை நிலைநாட்ட வேண்டும். இஃதே கட்டுரை முற்றிற்று.
நன்றி💐💐💐
எழுதுவது :
திவ்ய தர்ஷினி . இ
இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமாண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பண்டுதகாரண் புதூர் , மண்மங்கலம், கரூர் -6