தொழிற்சங்க ஒன்றியம் குதிக்கும் வேலைநிறுத்தம்
தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இன்றுமுதல் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி மார்ச் மாதம் 09ம் திகதி முதல் வரும் 15 ஆம் திகதி வரை
அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைகளை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உடபட்ட 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இதில் கூட்டமைப்பில் அங்கம் வசிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 8ஆம் திகதிக்குள் தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தமது அனைத்து பணி செயற்பாடுகளையும் நிறுத்தி அனைத்து சேவைகளும் முடங்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் குறித்த என ஏற்கனவே தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.