நாடு மீளவும் முடக்கப்படும் அபாயம்|எச்சரிக்கிறார் சிறிலங்காவின் சுகாதாரப்பணிப்பாளர்

மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்தச் செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. ஆனால், நாம் எதிர்ப்பார்த்தளவு அதனைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை.மாறாக விரைவில் மக்கள் அதனைப்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு நாம் இரண்டு தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக்கொண்டமைதான் என்றும் , இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள், மூன்று மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறமுடியும்” என தெரிவித்துள்ளார்.

அதேவேளை சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பண்டிகைகளை கொண்டாடினால் எதிர்காலத்தில் வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணம் மக்களின் முறையற்ற நடத்தையே தவிர வேறொன்றுமில்லை என்றும் முறையான சுகாதார ஆலோசனை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் அனைவருக்கும் பண்டிகை காலத்தை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட வாய்ப்பு கிடைக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

செய்திகள் எழுதுவது : நிஷா