பண்டிகை நாள்களிலும் தொண்டர்கள் பணி செய்து, தொடரப்படும் பூஸ்டர் தடுப்பூசி

இம் மாத இறுதிக்குள் ஒவ்வொரு வயது வந்தவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி கிடைக்கப்பெறச்செய்யவேண்டும் என் இலக்கோடு பணிகள் தொடர்வதனால், தன்னார்வமுள்ள தொண்டர்கள் இங்கிலாந்தில் உள்ள கோவிட் தடுப்பூசி வழங்கும் முக்கிய இடங்களில் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்டின் திரிவான “ஓமிக்ரான்” அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அதை எதிர்கொள்ளும் ஒரு பகுதியாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று மக்களுக்கு, முதல், இரண்டாவது மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை NHS அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டன்(London) மன்செஸ்டர்(Manchester) ,சுவிண்டன்(Swindon) மற்றும் ஈஸ்ட்போர்ண்(Eastbourne) உட்பட குறைந்தது எட்டு இடங்களில் இந்தப்பணிகள் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

32 மில்லியனுக்கும் அதிகமான பூஸ்டர்கள் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதன் பின்னணியில், மேலும் Omicron இன் தாக்கத்தைக் குறைக்க தகுதியானவர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசியைப் பெற முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அண்ணளவாக 60% வீதத்துக்கும் அதிகமான பெரியவயதுடையவர்கள் தற்சமயம் இங்கிலாந்தில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், கடந்த ஏழு நாட்களில் மட்டும் ஆகக்கூடுதலாக பதிவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நடைபெற்றுள்ளன என்று தேசிய சுகார சேவை NHS தெரிவிக்கின்றது.

இருப்பினும் ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து அல்லது வேல்ஸில் தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் டிசம்பர் 25 அல்லது 26 அன்று திறக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.