பிரான்சில் நீண்டகால சுகவீனமுற்ற சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க ஏற்பாடு

நீண்டகால சுகவீனமுற்ற ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க ஆரம்பிக்குமாறு பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் பிரான்சில் 12 வயது சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை மட்டுமே கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் பணி நடைபெற்றிருந்தது.

தற்போது நீண்டகால பாதிப்புக்கள் மற்றும் சுகவீனமுற்றவர்களுக்கும் கோவிட் தாக்கம் அல்லது பரவல் ஏற்படும் நிலைமைகள் அதிகம் இருக்கிறது என்ற அடிப்படையில்  5 முதல் 11 வயது வரையிலான அவ்வகைப்படுத்தப்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க பிரான்சின் முதன்மை சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக , உடல் பருமன் நோய் , சக்கரை வியாதி , ஆஸ்துமா , இதய நோய் மற்றும் நரம்பு வியாதிகள் போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகமாகி உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகச் சாத்தியக் கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி பிரன்ச் அரசு , சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின் பெயரில் இந்த முடிவை எடுத்து , நேற்று முதல் 5 வயது முதல் 11 வயது நிரம்பிய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தத்தும் நடவடிக்கை  பிரான்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

இந்த நடவடிக்கையின் மூலம் பிரான்சில் 360 000 குழந்தைகள் பயன்பெறவிருக்கிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இக் குழந்தைகளுக்குச் செலுத்தவிருக்கும் கொரோனா தடுப்பூசியானது , தற்போது பெரியவர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியின் நிறைய விட மிகக் குறைவான நிறையைக் கொண்டதாக இருக்கும் என பிரன்ச் அரசு அறிவித்துள்ளது.

செய்திகள் எழுதுவது : கமல்ராஜ்