வரலாற்று வெற்றி கொண்ட யாழ் மத்திய கல்லூரி| வடக்கின் பெருஞ்சமர்

116 ஆவது வடக்கின் பெருஞ்சமரில் வரலாற்று வெற்றியோடு  சம்பியனாக மகுடம் சூடியது யாழ் மத்திய கல்லூரி.

இது யாழ் மத்திய கல்லூரியின் 29வது வெற்றிக்கொண்டாட்டமாக பதிவாகியுள்ளது.
ஆரம்பம் முதலே களத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ் மத்திய கல்லூரி அணிக்கு  இரண்டாவது இனிங்க்ஸ் காக வெறும் 9 ஓட்டங்களே வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட , ஒருவிக்கெட்டை இழந்து 3.1 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து வெற்றிவாகை சூடியது.
ஆரம்பத்தில் முதல் இனிங்ஸ்க்காக முதல் நாள் ஆட்டத்தில் மத்தியகல்லூரி 279 ஓட்டங்களைக்குவித்தது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென்ஜோண்ஸ் ஆரம்பம் முதலே மள மள வென விக்கெட்டுக்களை இழந்து முதல் இனிக்ங்ஸ்க்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து  127 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து Follow on முறையில் இரண்டாவது இனிக்ஸ்ஸிலும் களமிறங்கிய சென்ஜோண்ஸ் , மத்திய கல்லூரியின் களத்தடுப்பிலும் பந்துவீச்சிலும் துவண்டது. இரண்டாவது இனிக்ஸ்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது 160 ஓட்டங்களைப்பெற , அது மத்திய கல்லூரிக்கு இலகு வெற்றி இலக்கானது.
யாழ் மத்திய கல்லூரியை பொறுத்தமட்டில் விக்னேஷ்வரன் பருதி மற்றும் ரஞ்சித்குமார் நியூற்றன் ஆகியோர் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக பிரகாசித்திருந்தனர்.
இந்தப்பட்டியில் மட்டும் நியூற்றன் 9 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வருடா வருடம் யாழ் நகரின் மிகப்பெரிய கொண்டாட்டமான இந்த வடக்கின் பெருஞ்சமரில் யாழ் மத்திய கல்லூரி தனது 29 வது வெற்றியைப்பதிவு செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *