மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் சிறீலங்கா

சிறீலங்காவில் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்து வருவதைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவது பாதுகாப்பு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்றைய காலைப்பொழுதில் கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் காற்றின் தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் புள்ளிவிவரங்கள் படி யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் 155 ஆக பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டியிருக்கிறது.

காற்றின் மாசு சுட்டெண் 100 க்கும் அதிகமாக இருப்பது  சுவாச நோய்களினால் அவதியுறுவோருக்கு  ஆபத்தானது என்பதைச் சுட்டிக்காட்டும் வல்லுனர்கள் , முகக்கவசம் அணிவதை  பாதுகாப்பானது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்

ஏனைய மாவட்டங்களில் காற்றின் தரக்குறியீடு தேவையான அளவில் இருப்பினும் வரும் நாள்களில் எவ்வாறு அமையுமென எதிர்வு கூற முடியாத நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *