முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – மே 18
காலத்தினால் அழியாத வடுக்களாய் இன்றும் அனைவரின் மனதின் ஆழத்தில் இருக்கும்
நினைவுநாள் முள்ளிவாய்க்கால்
. இனப்படுகொலை உச்சத்தில் வெளிப்பட்ட நாளும் கூட.
மே 18 என்று நினைத்தாலே சிதறுண்ட சதைகளும் இரத்தம் சிந்திய நிலங்களும் இறந்த மனித உடல்களால் நிரம்பிய நந்திக்கடலும் அழுகுரல் நிறைந்த காற்றின் ஓலமுமே கண்முன்னே வருகின்றன.
தமிழின விடுதலைக்காக போராடிய வீரர்களும், தமது உயிரினைக் காக்க ஓடிய அப்பாவி மக்களும் குண்டுகளுக்கு இரையாகி உயிர்த்தியாகம் செய்த இந்நாள் 14 வருடங்கள் கடந்தாலும் உலகெங்குமுள்ள ஒவ்வொரு தமிழனும் கண்ணீரில் நனைந்து ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் செய்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுவதைக் காணலாம்.
இன்றைய நாளில்
காலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பூசைகள் நடத்தப்பட்டதுடன் இறந்தவர்களின் நினைவாக தென்னங்கன்றுகள் வைக்கப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டன. முள்ளிவாய்க்கால் பொதுச்சுடரும் ஏற்றப்பட்டது.
இவ் அஞ்சலி நிகழ்வானது கொழும்பில் பல எதிர்ப்புக்கும் மத்தியில் செய்யப்பட்டதுடன் பல்வேறு இடங்களில் இதயபூர்வமான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது