சீனா பயணம் வெளிவிவகார அமைச்சர்
இலங்கையில் சீன முதலீடுகளை அதிகரித்தல், இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை வலுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து ஆராய எதிர்வரும் 24ம் திகதி முதல் 30ம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் கின் கேங்கின் (Qin Gang) அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதே வேளை சீனா தனது ஆதிக்கத்தை இலங்கையில் செலுத்திவருகின்றமை குறிப்பிட தக்கது.