அபாய எச்சரிக்கை!
நகரபுறபகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளே அதிகம் …இங்கு வாழும் மக்களும் அதிகம் .இதன்படி கொழும்பு மாநகர சபைகுட்பட்ட வேகந்த அடுக்கு மாடி திட்டம் ,பம்பலப்பட்டி அடுக்கு மாடி திட்டம் ,வேல்ஸ் குமார மாவத்தை குடியிருப்பு திட்டம்,
சிறிதம்ம மாவத்தை குடியிருப்புத் திட்டம், கம்கருபுற குடியிருப்புத் திட்டம், B36 மாளிகாவத்தை குடியிருப்புத் திட்டம், ஜி. எச். ஜே. கே. எம்.என் குடியிருப்புத் திட்டம் மற்றும் மிஹிந்து மாவத்தை குடியிருப்புத் திட்டம் ஆகிய எட்டு வீட்டுத் தொகுதிகள் இடிந்து விழும் அபாய ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட குடியிருப்பு தொகுதிகளை இடித்து தள்ளுமாறும் வீடமைப்பு அமைச்சிடம் குடியிருப்பு திட்டங்களின் ஆளுகை அதிகாரியான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வெளியிடங்களில் இருந்து கொழும்பு நகரத்தில் வேலை செய்பவர்கள் அதிகமாகும்.இவர்களில் பல பேர் இவ்வாறான குடி இருப்பு திட்டங்களில் வாடகைக்கு இருக்கின்றமையும் குறிப்பிட தக்கது. இவ்வாறு இடித்து தள்ளும் பட்சத்தில் வாடகைக்கு இருக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என்பது குறிப்பிட தக்கது.