மழையுடன் கூடிய வானிலை
மேல் ,சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் சில இடங்கிளிலும் கண்டி ,காலி,மாத்தறை,நுவரெலியா ஆகிய இடங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும்.
வட மேல் மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யலாம் என்றும் ஊவா,அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும்
புத்தளம் ,ஹம்பாந்தோட்டை திருகோணமலை மாவட்டங்களில் 40-45 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசலாம் என்றும்,கடல் பிராந்தியங்களில் 25-40 km வேகத்தில் தென் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும் என்றும் பொத்தவில் கடற் பிராந்தியஙகளில் மணித்தியாலத்திற்கு 50-60 kmற்கு அதிக வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் என்றும் ,இவ்வாறான நிலையில் கடற் பகுதி கொந்தளிப்பாக இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடி,மின்னல்,மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் கவனமாக இருக்குமாறும் ,கடற் பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்க்கு மாறு வளிமண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.