நாடாளாவிய ரீதியில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…!
நாடளாவிய ரீதியில் நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் போது இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்….
“ஜனாதிபதியால் கொண்டு வரப்பட்ட திட்டம் நல்ல பயனுள்ள திட்டமாகும். அதற்காக ஜனாதிபதி கிராமம் கிராமமாக சென்று பதிவு எடுக்கமுடியாது. அதனால் அந்த பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஏற்கனவே உள்ள சமுர்த்தி பட்டியலை எடுத்து அதில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டோர், முதியோர் பெயர்களை தெரிவுசெய்து அதன் பின்னர் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு பதிவு செய்து அதன் பின்னர் ஏனையவர்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆனால் பிரதேச செயலாளர்கள் கண்காணிப்பற்று மேற்பார்வை செய்யாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ஆளும் தரப்பு உறுப்பினர்களை சந்திக்கும் போது உள்வாங்கப்படாத பயனாளிகளை மீள இணைப்பதற்கான அழுத்தத்தினை கொடுப்போம் என மேலும் தெரிவித்தார்.
இதே வேளை நாடளாவிய ரீதியில் இத்திட்டத்திற்கு உள்வாங்கப்படாத மக்களால் ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.