இந்துக்களுக்கு இடையில் மாபெரும் சமர்!

IMF ன் கடன் கிடைக்கும் முன்பும் சரி கடன் கிடைத்த பின்பும் சரி அன்றிலிருந்து இன்று வரை IMF என்பது ஒரு பேசு பொருளாக அமைந்துள்ளது.

இந்த வகையில் இதன் கீழ் ஒரு விவாதம் கிடைத்தால் வாதாடவா முடியாது…?இல்லை வாதத்தை ரசிக்கவா முடியாது…?ஆம் IMF இன் பரிந்துறைகளை பின்பற்றுமிடத்து ,இலங்கையானது பொருளாதார ஸ்திரதன்மையை அடையும் எனும் வாதம் ஏற்புடையது!/இல்லை! எனும் தலைப்பில் வடக்கின் ஜாம்பவனான யாழ் இந்துக்கல்லூரிக்கும் மேற்கின் ஆதவனான கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் விவாத சமர் எதிர் வரும் 30/06/2023 வெள்ளி கிழமையன்று மாலை 6.31 க்கு பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தலைமை இந்துவின் வேந்தர் கணபதிபிள்ளை நாகேந்திரா, பேரதிதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.இராசமாணிக்கம் சாணக்கியன் ,சிறப்பதிதி கட்டிட கலை நிபுணர் உயர் திரு ராஜூ சிவ ராமன் ,மற்றும் விவாதிகள் , ரசிப்போர் என பலதரப்பட்ட நபர்கள் சூழ இந்த விவாத மேடை நடைப்பெருகிறது.

தமிழ் மொழி தரணி எல்லாம் ஓங்கி ஒலிக்க தன்னிகரல்லா விவாத மேடை ஜொலிக்க அனைவரும் கண்டுகளிக்க இணையுங்கள் பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *