“கெங்கல்ல”பிரதேசத்தில் வாகன திருட்டு…!
கெங்கல்ல பிரதேசத்தின் வாகன விற்பனை நிலையத்தில் இருந்து நேற்று இரவு 770 லட்சத்திற்கும் அதிக பெருமதியான 4 வாகனங்கள் திருடி செல்லப்பட்டுள்ளன.வாகன விற்பனை நிலையத்தில் இருந்த 2 ஊழியர்களை கட்டி வைத்து விட்டு 5 பேர் கொண்ட குழுவால் இவ்வாகனங்கள் திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது வத்தேகம,தொரகமுவ,ஶ்ரீமல் வத்தையில் அமைந்திருக்கும் வீடொன்றின் பின்பகுதியின் கெரஜ்ஜில் வைத்து டிபெண்டர் ஜீப் 2 களை கைப்பற்றினர். இதன் போது 2 சந்தேக நபர்களை கைது செய்தனர்.இதில் முன்னால் மத்திய மாகணசபை அமைச்சரின் மகனும் உள்ளடங்குவார்.கண்டு எடுக்கப்பட்ட இரண்டு வாகனங்களும் அமைச்சரின் மகனின் வீட்டிற்கு பின்னால் இருந்த கெரஜ்சில் வைத்து என்பது குறிப்பிட தக்கது.
இதற்கிடையில் தெல்தெனிய பொலிஸாரால் ,நிட்டம்புவ பன்வில பகுதியில் வைத்து மற்றைய டிபண்டரை கண்டுபிடித்தனர்.அப்போது அவ் டிபண்டர் பகுதிகளாகப்பட தயார் நிலையில் இருந்த வாறு, லொறி ஒன்றில் ஏற்றிய வண்ணம் கண்டு பிடித்தனர்.இதன் போது 28 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மற்றைய வேன், பொல்கொல்ல நீர் நிலையத்திற்கு செல்லும் வீதியில் கண்டு பிடித்தனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.