எரி பொருட்களின் விலையில் திருத்தம்..!

அண்மைகாலத்தில் பல பொருட்களுக்கு விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.அந்த வகையில் இன்று(01.07.2023) முதல் எரி பொருட்களுக்கான புதிய விலை திருத்தப்பட்டியலும் வெளியாகியுள்ளது.

அந்த வகையில்
92 ரக பெற்றோல் ரூ.10 அதிகரிப்பு
95 ரக பெற்றோல் ரூ.20 குறைப்பு,
சூப்பர் டீசல் ரூ.6 அதிகரிப்பு
ஆட்டோ டீசல் ரூ.2 குறைப்பு
மண்ணெண்ணெய் ரூ.9 குறைப்பு என புதிய விலை திருத்தங்களை வெளியிடப்பட்டுள்ளது.

இதே வேளை இன்றைய தினத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ நிறவனம் சமையல் எரி வாயுவின் விலையை குறைக்கவுள்ளதாகவும் ,இது விலை பொறிமுறையூடாக இம் மாற்றம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இத்தோடு லிட்ரோ நிறுவனம் நான்காவது தடவையாக விலை குறைப்பு செய்துள்ளமை என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *