சந்திரனுக்கு மீண்டும் விண்கலம் அனுப்பும் இந்தியா..!
இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ நாளை சந்திரயான் -03 விண்ணில் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பகல் 01.க்கு, 26 மணி நேரத்திலிருந்து நேரத்தை எண்ணத் (countdown )தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா சதீஸ் தவாண் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2.37 நிமிடம்17 வினாடிகளில் சந்திரயான் -03 ஐ சுமந்து செல்லும் ரொக்கட் விண்ணில் பாயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாளை பயணிக்க இருக்கும் சந்திரயான் -03 தனது பயணத்தில் வெற்றியடைய இன்று காலை திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான். -03 மாதிரியை சுவாமி சன்னிதியில் வைத்து வழிப்பாட்டில் ஈடுப்பட்டனர்.
இதே வேளை இந்தியாவால் அனுப்ப பட்ட சந்திரயான் -01 நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது,சந்திரயான்-02 வெற்றியடைய வில்லை இந்நிலையில் தான் நாளை சந்திரயான்- 03 புறப்படுகிறது.
இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.