சொக்லைட் பெட்டி ஏல விற்பனையில்..!
ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொருவிதமான பொருட்களை ஏலத்தில் விடும்.அப்போது அந்த பொருட்களை வாங்குவதற்கு பல மக்கள் போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள்.
தற்போது ஒரு சொக்லைட் பெட்டி ஏல விற்பனைக்கு வந்துள்ளது. என்ன சொக்லைட் பெட்டியா என நீங்கள் யோசிப்பது ..புரிகிறது…ஆம் இது சாதாரண சொக்லைட் பெட்டி அல்ல 121 வருட ஆண்டுகள் பழமையான (cadbury) சொக்லைட் பெட்டி.
இதன் பின்னணியில் ஒரு பசுமையான நெஞ்சில் நின்ற கதை ஒன்று இருக்கிறது.1902 ஆம் ஆண்டில் எட்வர் 7ம் மற்றும் அலெக்ஸாண்ட்ரா ஆகியோரின் முடிசூட்டு விழாவை கொண்டாடுவதற்கு cadbury நிறுவனத்தால் பல சொக்லைட்கள் செய்யப்பட்டன. அப்போது ஒன்பது வயதான மேரி ஆன் பிளாக் மோருக்கு அவரது பள்ளியில் அந்த சொக்லைட் பெட்டி வழங்கப்பட்டது.அனால் அவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக ,அந்த நிகழ்வின் நினைவு சின்னமாக வைத்திருந்தார்.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அப்படியே வைத்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் தான் தற்போது பிளாக்மோர் குடும்பத்தினர் இந்த சொக்லைட் பெட்டியை ஏலத்தில் விட்டுள்ளனர்.