சோதனையின் போது ரொக்கெட் வெடித்து விபத்து..!
விண்வெளிக்கு பல நாடுகள் போட்டியில் ரொக்கட்களை அனுப்ப முயற்சி எடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு சில நாடுகள் இலகுவாக வெற்றியை அடைகின்றன.ஒரு சில நாடுகள் தோலவியை தழுவுகின்றன.
அண்மையில் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளும் போது வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஜப்பானின் அகிடா மாகாணம் நோஷிரோவில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. அங்கு எப்சிலன் எஸ் என்ற சிறிய ரக ரொக்கட்டினை விண்ணில் செலுத்துவதற்காக சோதனை நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. அதன் போது எதிர்பாரதவிதமாக அந்த ரொக்கட் என்ஜின் வெடித்து சிதறியது.இதன் போது குறித்த கட்டிடம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
குறித்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு நிலவியது.