தாழ்வாக பறந்த விமானம்.
விமானங்கள் மிக உயரத்தில் தான் பறக்கும் .ஆனால் அண்மையில் பறந்து பல பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட நேரம் விமானம் மிக தாழ்வாக பறந்ததன் காரணமாக விமானி விமானத்தை உயர்த்த முயற்சித்துள்ளார்.
இதன் போது பல வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.மரங்கள் சரிந்து விழுந்ததுடன் விமானத்தில் இருந்து வெளியேறும் அதிக அழுத்தம் காரணமாக பல வீடுகள் சேததிற்குள்ளாகியுள்ளதாக நீர் கொழும்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாகொன்ன கொடல்ல முதல் கடவல மங்களராம விகாரை வரையிலான 5கிலோ மீற்றர் பரப்பளவில் அமைந்திருந்த வீடுகளுக்கே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக கட்டான பொலிஸிற்கும் கட்டுநாயக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.