உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எதிர்கொள்ளும் போட்டிகள் அட்டவணை வெளியீடு..!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உலக கிண்ண போட்டிகள் நடைப்பெற இருக்கினறன. எந்த அணி இம்முறை உலககிண்ணத்தை தனதாக்கி கொள்ளும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்தியாவில் போட்டிகள் நடைப்பெருவதால் இந்தியா அணிதான் உலக கிண்ணத்தை வெல்லும் என பலராலும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உலக கிண்ணத்தொடரில் இந்திய அணி எதிர்கொள்ளும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதலாவது போட்டியானது தொடர் உலககிண்ண செம்பியனான அவுஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்தப்போட்டி சென்னையில் இடம்பெற இருக்கின்றது.
இதன் பிறகு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என பலபரீட்சை நடத்துகின்றது.
அதன்பிறகு
அக்டோபர் 19ம் திகதி பங்களதேசத்திற்கு எதிராக புனேவிலும்
அக்டோபர் 22 ம் திகதி நியூசிலாந்துக்கு எதிராக தர்மசாலாவிலும.
ஒக்டோபர் 29 ம் திகதி இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவிலும் போட்டியில் பங்கு பற்றும் அதே வேளை
நவம்பர் 2 ம் மற்றும் 5 ம் திகதி,11 ம் திகதிகளிலும் விளையாட இருக்கின்றமை குறிப்பிடதக்கது.
இவ் போட்டிகளில் இந்திய அணி எவ்வாறு விளையாடுகிறது என்பதை பொருத்து தான் இந்த உலக கிண்ணம் இந்தியா கைப்பற்றுமா இல்லையா என்பது தெரிய வரும்.