வங்கி விடுமுறை தொடர்பாக வர்த்தமானி வெளியீடு..!
விடுமுறை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும. ஆனால் வங்கி விடுமுறை என்றால் எல்லோருக்கும் பிடிக்குமா என்று கேட்டால் வங்கி ஊழியர்களை தவிர மற்றையவர்களுக்கு பிடிக்காது என்று தான் சொல்வார்கள்.
பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ எதிர்வரும் ஆண்டுகான வங்கி விடுமுறை தினங்கள் அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 25 நாட்கள் அரச மற்றும் வங்கி விடுதுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான திணேஸ் குணவர்த்தனவின் கையொப்பத்துடன் இவ் வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிட தக்கது.